உயிலங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருக்கேதீஸ்வரம் – பாலாவி குளத்தில் நேற்றிரவு (08) நீராடச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
வவுனியா – பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 9 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிலங்குளம – திருக்கேதீஸ்வரம் கோவிலில் இடம்பெற்ற திருவிழாவை பார்ப்பதற்காக சென்ற குறித்த சிறுவன் நீராடச் சென்ற போதே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலம் மன்னார் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் உயிலங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.