பண்டிகை காலத்திற்காக எதிர்வரும் வாரத்தில் நாற்பது மில்லியன் முட்டைகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
ஒரு முட்டையை நுகர்வோருக்கு 43 ரூபாவுக்கு தட்டுப்பாடு இன்றி விற்பனை செய்ய முடியும் என அதன் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்தார்.