Saturday, May 10, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேயிலைத் தோட்டத்தில் 17 வயது யுவதியின் சடலம் மீட்பு

தேயிலைத் தோட்டத்தில் 17 வயது யுவதியின் சடலம் மீட்பு

எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலாவ வீதி, நாணயக்கார மாவத்தை பகுதியில் உள்ள தேயிலை தோட்டம் ஒன்றில் இருந்து 17 வயதுடைய யுவதியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த யுவதி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கரந்தெனிய, மந்தகந்த, தல்கஹாவத்தை பகுதியைச் சேர்ந்த ஹன்சிகா நதீஷானி என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று (08) கரந்தெனிய தல்கஹாவத்தை, கங்க வீதி பகுதியில் வைத்து முச்சக்கர வண்டியில் வந்த குழுவொன்றினால் குறித்த யுவதியை பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன் எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles