கனடாவின் ஒட்டாவா பகுதியில் இலங்கையர்கள் 6 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கையரான 19 வயதுடைய இளைஞன் தற்கொலை செய்யும் மனநிலையில் இருந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞன் தான் கல்வி கற்கும் பாடசாலையில் சில பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும், அவருக்கு மன அழுத்தம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஒட்டாவாவில் வசித்த இலங்கை குடும்பம் ஒன்றின் இளம் தாய் ஒருவரும் அவரது நான்கு பிள்ளைகளும் குடும்பத்துடன் வசித்து வந்த மற்றுமொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சந்தேக நபரான ஃபெப்ரியோ டி சொய்சா என்ற இளைஞனும் இவர்களுடன் சில காலம் வாழ்ந்து வந்துள்ளார்.
கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தந்தையின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்படுகிறது.