Thursday, October 9, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாகன விபத்தில் 4 வயது சிறுவன் பலி

வாகன விபத்தில் 4 வயது சிறுவன் பலி

கற்பிட்டி – நுரைச்சோலை – பூலாச்சேனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 வயது சிறுவன் உயிரிழந்துள்ள்ளார்.

நுரைச்சோலை – பூலாச்சேனை பகுதியைச் சேர்ந்த முஹம்மது சஹீர் சகி முஹம்மது எனும் 4 வயது சிறுவனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுவன் வீட்டுக்கு முன்பாக விளையாடிக் கொண்டிருந்த போது, தனது சிறிய ரக துவிச்சக்கர வண்டியுடன் வீதிக்கு சென்றுள்ளார்.

இதன்போது வீதியில் பயணித்த லொறி குறித்த சிறுவன் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles