கடந்த பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி அதிக போதைப்பொருள் பாவனை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 25 வயதுடைய பிரபல ஆபாச பட நடிகை எமிலி வில்லிஸ் கடுமையான கோமா நிலைக்குச் சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவர் தற்போது வென்டிலேட்டரின் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரால் எந்த வகையிலும் உணரவோ அல்லது பதிலளிக்கவோ முடியவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதால் அவரை காப்பாற்ற GoFundMe நிதி திரட்டும் வசதி அமைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிதிக்கு ஏற்கனவே சுமார் 32,500 டொலர்களை கிடைத்துள்ளளதாக உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.