Sunday, August 24, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசர்ச்சைக்குரிய சுழிபுரம் புத்தர் சிலை அகற்றப்பட்டது

சர்ச்சைக்குரிய சுழிபுரம் புத்தர் சிலை அகற்றப்பட்டது

அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின் புறமாக உள்ள அரச மரத்தின் கீழ் குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்தது.

அப்பகுதியில் உள்ள கடற்படையினரால் புத்தர் சிலை வைக்கப்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் சந்தேகித்த நிலையில், புத்தர் சிலையை அடுத்து விகாரை தோற்றம் பெறலாம் என அச்சப்பட்டனர்.

இது தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பேசுபொருளான நிலையில் குறித்த புத்தர் சிலை அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles