Friday, March 14, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகனடாவில் 6 இலங்கையர்களை கொன்ற 19 வயது இலங்கையர் கைது

கனடாவில் 6 இலங்கையர்களை கொன்ற 19 வயது இலங்கையர் கைது

கனடா – ஒட்டாவாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட 6 இலங்கையர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கொலை தொடர்பாக 19 வயதான இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேநேரம் இந்த கொலைக்கு கத்தி பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை எனவும் ஒட்டாவா பொலிசார் தற்போது அறிவித்துள்ளனர்.

இலங்கையிலிருந்து அண்மையில் புலம்பெயர்ந்துச் சென்று கனடாவில் குடியேறிய குடும்பம் ஒன்றே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் 35 வயதுடைய தர்ஷனி டிலந்திகா ஏக்கநாயக்க என்ற பெண்ணும் அவரது ஏழு வயதுடைய மகனும், நான்கு வயதுடைய மகளும், இரண்டு வயதுடைய மகளும், இரண்டு மாத குழந்தையும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த ஆறாவது நபர் 40 வயதுடைய காமினி அமரகோன் என்பவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பிள்ளைகளின் தந்தை சம்பவத்தில் காயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலைக்கான காரணம் இன்னும் வெளியாக்கப்படவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles