ஷெல் எரிபொருள் நிறுவனம் மீண்டும் இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.
நிறுவனத்தின் முதலாவது எரிபொருள் கப்பல் 63 வருடங்களின் பின்னர் எதிர்வரும் 19 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசிக்கவுள்ளது.
1880 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் இயங்கி வந்த ஷெல் எரிபொருள் நிறுவனத்தை 1961 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் கைப்பற்றியது.
அதன் பின்னர் ஆசியாவில் தனது செயற்பாடுகளை இலங்கையிலிருந்து நீக்கிய அந்நிறுவனம், சிங்கப்பூரில் ஆரம்பித்து இன்று சிங்கப்பூரில் மாபெரும் நிறுவனமாக மாறியுள்ளது.
இந்நிலையில், 63 ஆண்டுகளுக்குப் பின்னர், ஷெல் நிறுவனம் மீண்டும் இலங்கையின் எரிசக்தி துறையில் இணைகிறது.
இந்த அரசாங்கத்தின் எரிசக்தி மற்றும் பொருளாதார சீர்திருத்த திட்டத்தின் கீழ், இறக்குமதி செய்வதற்கும், சேமித்து வைப்பதற்கும் மற்றும் விநியோகிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக 150 எரிபொருள் நிலையங்களை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதுடன், புதிய எரிபொருள் நிலையங்களை ஆரம்பிக்க 50 உரிமங்களும் வழங்கப்பட்டுள்ளன.