Sunday, May 12, 2024
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின் கட்டணத்தை தவணை முறையில் செலுத்த வாய்ப்பு

மின் கட்டணத்தை தவணை முறையில் செலுத்த வாய்ப்பு

மின் கட்டண இணைப்புக்காக அறவிடப்படும் கட்டணத்தை நுகர்வோர் தவணை முறையில் செலுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

வாய்மூல பதிலை எதிர்ப்பார்த்து, நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம் தர்மசேன இன்று நாடாளுமன்ற கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் கஞ்சன விஜேசேகர, நுகர்வோரின் நலனை கருத்திற்கொண்டு புதிய மின் இணைப்புக்கான கட்டணத்தை தவணை முறையில் செலுத்துவதற்கான திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.

அத்துடன், இதற்காக நுகர்வோர் புதிய மின் கட்டண இணைப்புக்கான மொத்த கட்டணத்தில் 25 சதவீதத்தை செலுத்த வேண்டும்.

எஞ்சிய கட்டணத்தை 10 அல்லது 12 மாதங்களில் செலுத்த முடியும்.

இதற்கு பணிப்பாளர் சபை அனுமதி வழங்கியுள்ளதுடன், உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதம் குறித்த தீர்மானம்

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதங்கள் தொடர்பில் தெளிவான பகுப்பாய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சிரேஷ்ட...

Keep exploring...

Related Articles