பேலியகொட – நீர்கொழும்பு வீதியில் உள்ள கழிவு கால்வாயில் நேற்று (06) அடையாளம் தெரியாத சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேலியகொட – நீர்கொழும்பு வீதியில் மீன் சந்தைக்கு திரும்பும் வழிகாட்டி பலகைக்கு அருகில் உள்ள கழிவு கால்வாயில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 35 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட,சுமார் 05 அடி 07 அங்குல உயரமும், தடிமனான தாடியும்இ முழுமையாக வளர்ந்த மீசையுடனான சாதாரண உடலைக் கொண்டவர் என கூறப்படுகுpறது.
அவர் இறக்கும் போது, நீலம் மற்றும் சிவப்பு கோடுகள் கொண்ட சட்டை மற்றும் காற்சட்டை அணிந்திருந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
சடலம் பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பேலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.