பலாங்கொடை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்று (06) பிற்பகல் பனிமழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
பலாங்கொட, கிரிமெட்டிதென்ன, யஹலவெல, தொட்டுபெலதன்ன, ஹபுகஹகும்புர, கஹட்டபிட்டிய, பல்லபனதன்ன, கெகில்ல, படுகம்மன போன்ற பிரதேசங்களில் நேற்று கடும் பனிமழை பெய்துள்ளதுடன், பனிக்கட்டிகளும் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக பெய்த கனமழை காரணமாக மேற்படி பிரதேசங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.