Tuesday, May 14, 2024
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டு200 மின்சார பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை

200 மின்சார பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை

200 மின்சார பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் 50 மின்சார பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் தனியாராலும், இலங்கை போக்குவரத்து சபையாலும் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பேருந்துகளிலும் CCTV கெமராக்களை பொருத்துவது கட்டாயமாக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

இலங்கை போக்குவரத்து சபையும், ரயில்வே திணைக்களமும் இணைந்து 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தவிருந்த E-Ticket முறையை, அடுத்த 6 மாதங்களுக்குள் அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை – இந்திய கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு

யாழ்ப்பாணத்திற்கும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் இடையில் இன்று(13) முதல் மீண்டும் ஆரம்பமாகவிருந்த கப்பல் சேவை எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த பயணிகள் பயண திகதியை...

Keep exploring...

Related Articles