Monday, January 19, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீதிமன்றத்திற்கு முன்பாக அசிட் வீச்சு - 6 பேர் காயம்

நீதிமன்றத்திற்கு முன்பாக அசிட் வீச்சு – 6 பேர் காயம்

இரத்தினபுரி புதிய நகரத்தில் அமைந்திருக்கும் மேல்‌ நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று காலை அசிட் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த அசிட் தாக்குதலில் 6 பேர் பலத்த காயமடைந்துள்ளதுடன், அவர்கள் இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர்.

வாகன விபத்தில் உயிரிழந்த ஒருவரின் ஆதரவாளர்களால் இந்த எசிட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக இரத்தினபுரி காவற்துறையினர் தெரிவித்தனர்.

இரத்தினபுரி மேல் நீதிமன்றத்துக்கு பொறுப்பான பொலிஸ் பரிசோதகர் (பிரதீப் சேனாநாயக்க மற்றும் இரத்தினபுரி குற்ற புலனாய்வு பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ் பரிசோதகர் காமினி ஆகியோரின் தலைமையில் மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார். மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles