இலங்கை சனத்தொகையில் சுமார் 5 வீதமானோர் க்ளூகோமா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் ஒரு குறிப்பிட்ட அதிகரிப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அதே போல் உலகளவில் க்ளூகோமாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.