Friday, March 14, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇடைநிறுத்தப்பட்ட பரீட்சைகள் இன்று முதல் ஆரம்பம்

இடைநிறுத்தப்பட்ட பரீட்சைகள் இன்று முதல் ஆரம்பம்

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட மேல் மாகாண பாடசாலைகளின் 10 ஆம் மற்றும் 11 ஆம் தரப் பரீட்சைகள் இன்று (06) முதல் மீண்டும் நடைபெறவுள்ளன.

தவணைப் பரீட்சையில் இதுவரை நடத்தப்படாத பாடங்களுக்கான பரீட்சைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைக்கு முன்னதாக அறிவியல், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள்கள் சமூக வலைதளங்களில் வெளியானதால், 10 ஆம் மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பரீட்சைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.

குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

எவ்வாறாயினும், புதிய வினாத்தாள்களை தயாரித்த பின்னர், குறித்த பரீட்சைகள் இன்று முதல் மீண்டும் இடம்பெறும் என மேல் மாகாண கல்வித் திணைக்களம் அறிவித்திருந்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles