Monday, March 16, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆமை முட்டைகளுடன் ஒருவர் கைது

ஆமை முட்டைகளுடன் ஒருவர் கைது

ரத்கம கடற்கரையில் ஆமை முட்டைகளுடன் நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் நீதி நடவடிக்கையுடன் இணைந்து ரத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிஸ்டல் சாண்ட்ஸ் ஹோட்டலுக்கு முன்பாக உள்ள கடற்கரையில் வைத்து நேற்று (05) அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

153 ஆமை முட்டைகளை வைத்திருந்த ரத்கம பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைக்காக வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்தில் அவரை ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles