சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று எதிர்வரும் 7ஆம் திகதி நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளது.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் பல அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன் தொகையின் மூன்றாவது தவணை குறித்து ஆலோசிக்க அவர்கள் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.