Monday, September 15, 2025
28.4 C
Colombo
செய்திகள்உலகம்முதலிடத்தை இழந்தார் எலான் மஸ்க்

முதலிடத்தை இழந்தார் எலான் மஸ்க்

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் டெஸ்லா நிறுவனரும், தலைவருமான எலான் மஸ்க் முதல் இடத்தை இழந்துள்ளார்.

நேற்று பங்குச் சந்தையில் டெஸ்லா நிறுவனத்தின் பங்கு 7.2 சதவீதம் சரிவை சந்தித்த நிலையில் அவரின் நிகர சொத்து மதிப்பு 197.7 பில்லியன் அமெரிக்க டொலராக குறைந்துள்ளது.

இதனால் அமேசான் நிறுவுனர் பெசோஸ் 200.3 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஒரு கட்டத்தில் எலான் மஸ்க்- பெசோஸ் இடையிலான சொத்து மதிப்பு வித்தியாசம் 142 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது.

2022இல் இருந்து ஏறக்குறைய அமேசானின் பங்குகள் இரண்டு மடங்கு அதிகரித்தன.

டெஸ்லாவின் பங்கு 2021இல் அதன் உச்சத்தில் இருந்து சுமார் 50 சதவீதம் அளவுக்கு குறைந்ததாக கூறப்படுகிறது.

இந்த பங்கு சந்தையின் விளைவு காரணமாக அமேசான் நிறுவனர் பெசோஸ் தற்போது முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles