Saturday, May 3, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறுமியை வன்புணர்ந்த பூசகருக்கு 20 வருட கடுங்காவல் சிறை

சிறுமியை வன்புணர்ந்த பூசகருக்கு 20 வருட கடுங்காவல் சிறை

சிறுமியை வன்புணர்ந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பூசகருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

குற்றவாளி தனது வீட்டில் ஆலயமொன்றை நடத்தி வந்துள்ளதுட்ன, துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி மனநோயினால் பாதிக்கப்பட்டிருந்தமையினால் அவர் தனது பாதுகாவலர்களுடன் சிகிச்சைக்காக அங்கு சென்றுள்ளார்.

குறித்த சிறுமி நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல் நிலை வழமைக்கு திரும்பாததால், ஆலயத்தின் அருகில் உள்ள வீட்டில் தங்கி, தேவையான பரிகாரங்களை செய்து கொள்ளுமாறு, குற்றவாளியான பூசகர் தெரிவித்துள்ளார்.

அதன்படி குறித்த சிறுமி கோவிலுக்கு அருகில் உள்ள வீடொன்றில் தங்கியுள்ளதுடன், குறித்த பூசகர் சிறுமிக்காக பரிகாரங்களை செய்து வந்துள்ளார்.

இதன்போது குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்தது.

நீண்ட விசாரணையின் பின்னர், தீர்ப்பை அறிவித்த உயர்நீதிமன்ற நீதிபதி, பிரதிவாதிகள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles