UPDATE – ஹங்வெல்ல- நிரிபொல பிரதேசத்தில் இன்று (04) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ‘மன்னா ரொஷானின்’ மூத்த சகோதரர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த நபர் மற்றுமொரு நபருடன் கெப் வண்டியில் பயணித்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T-56 ரக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவருடன் பயணித்த மற்றைய நபரும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மன்னா ரொஷான் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி பாதுக்க, துன்னானை, வெந்தேசி வத்த காணியில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
ஹங்வெல்ல, நிரிபொல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டி-56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.