முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
பேலியகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2005ஆம் ஆண்டு பேலியகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை அடித்துக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் இருவருக்கும் தண்டனை விதிக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணையில் இவர்களை ஒரே குற்றச்சாட்டில் குற்றவாளிகள் என அறிவித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்த தீர்ப்பை வழங்கினார்.