Tuesday, May 14, 2024
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து - கார் மோதி விபத்து: 5 பேர் காயம்

பேருந்து – கார் மோதி விபத்து: 5 பேர் காயம்

தம்புள்ளை – ஹபரண பிரதான வீதியின் பெல்வெஹெர பகுதியில் இன்று (04) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்து ஒன்றும் கார் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருடன் பிக்குணி உட்பட 5 பேர் காயமடைந்துள்ளனர்.

மற்றுமொரு லொறியை கடக்க முற்பட்ட போது, ​​ஹபரணவில் இருந்து வந்த பேருந்து, தம்புள்ளையில் இருந்து ஹபரண நோக்கி வெளிநாட்டவர்களை ஏற்றிச் சென்ற காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் – ஜனாதிபதி சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லு, (Donald Lu) இன்று...

Keep exploring...

Related Articles