பாடசாலை புத்தகப் பைகளின் எடையை குறைப்பதற்கான சுற்றறிக்கை இன்று (04) முதல் அமுலுக்கு வருகிறது.
இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கை இன்று பாடசாலைகளுக்கு வழங்கப்படவுள்ளதாக மேல்மாகாண கல்வி செயலாளர் தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளின் எடை அதிகரிப்பினால் மாணவர்களின் முதுகுத்தண்டு தொடர்பான கோளாறுகள் மற்றும் உடல் உபாதைகள் ஏற்படுவதாக சுகாதார அமைச்சு அண்மையில் சுட்டிக்காட்டியுள்ளது.
அதற்கு தீர்வாக இந்த புதிய சுற்றறிக்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.