விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
சர்ச்சைக்குரிய இம்யுனோகுளோபுலின் தடுப்பூசி மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்த முதலாம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்ற போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2 ஆம் திகதி அவர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்றில் இரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்க உள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.
இதன்படி, சந்தேக நபரை இன்று (04) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி உரிய வாக்குமூலத்தை பெற்றுக் கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.