Friday, November 7, 2025
26.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇரு பெண் குழுக்களிடையில் மோதல் - ஒருவரின் நிலை கவலைக்கிடம்

இரு பெண் குழுக்களிடையில் மோதல் – ஒருவரின் நிலை கவலைக்கிடம்

மீகஹாகிவுல – தல்தென பகுதியில் இரு பெண் குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் காயமடைந்த 06 வயது சிறுமியும் இரண்டு பெண்களும் மீகஹாகிவுல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆபத்தான நிலையில் இருந்த பெண் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரே பகுதியை சேர்ந்த இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை வைத்தியசாலை பொலிஸார் மற்றும் கந்தகெட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles