2,500 பட்டதாரிகளுக்கு இன்று (01) ஆசிரியர் நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.
மேல் மாகாணத்தில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற ஆசிரியர் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதாகவும், மேல் மாகாணத்தில் 2,000 இற்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.