பெரியநிலவாணி பகுதியில் பாடசாலை போக்குவரத்தில் ஈடுபடும் வேனொன்று மோதியதில் சிறுவன் உயிரிந்துள்ளார்.
வேன் மோதியதில் படுகாயமடைந்த சிறுவன் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று (29) காலை பெரியநிலவாணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஷ்ணு வித்தியால வீதி பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
4 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுவனின் மூத்த சகோதரியின் பாடசாலை வேன் மோதியதில் இந்த மரணம் சம்பவித்துள்ளது.
விபத்து தொடர்பில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.