எதிர்வரும் மார்ச் மாதம் எரிபொருள் விலையில் திருத்தம் இடம்பெறாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி எரிபொருள் விலை தற்போதுள்ள நிலையிலேயே பேணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலைத் திருத்தத்தின் பிரகாரம் நேற்று (29) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.