Wednesday, December 24, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅமைச்சர் ஜீவன் - இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

அமைச்சர் ஜீவன் – இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை (29) கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது.

இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் சம்பந்தமாகவும், சமகால நிலைவரங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

மலையக மறுமலர்ச்சிக்காக இந்தியா வழங்கி வரும் அபிவிருத்திசார் பங்களிப்புகளுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், மலையக மாணவர்களுக்கு இந்தியா வழங்கிவரும் புலமைப்பரிசில் திட்டங்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

அதேவேளை இலங்கைஇ இந்தியாவுக்கிடையிலான உறவை மேம்படுத்துவதில் மலையக மக்களுக்குரிய வகிபாகம் பற்றியும், பாரத் – லங்கா வீட்டு திட்டம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles