Monday, May 12, 2025
28.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டு7,000 பேரிடமிருந்து அஸ்வெசும கொடுப்பனவை மீளப்பெற நடவடிக்கை

7,000 பேரிடமிருந்து அஸ்வெசும கொடுப்பனவை மீளப்பெற நடவடிக்கை

அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் கீழ் சுமார் 250,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதேச செயலகங்களில் நேரடியாக வழங்கப்பட்ட விண்ணப்பங்களை ஒன்லைன் ஊடாக தரவு கட்டமைப்பில் உள்ளடக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

அதற்கமைய, இரண்டாம் கட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வழங்கப்பட்ட சந்தர்ப்பம் எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.

இதனிடையே, பொய்யான தகவல்களின் மூலம் அஸ்வெசும நன்மைகளைப் பெற்ற சுமார் 7,000 பேர் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான நபர்களிடமிருந்து பணத்தை மீளப்பெறவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles