Sunday, September 7, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து கவிழ்ந்து விபத்து: 42 பேர் காயம்

பேருந்து கவிழ்ந்து விபத்து: 42 பேர் காயம்

சியம்பலாண்டுவ பகுதியில் இன்று (29) காலை பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 28 பாடசாலை மாணவர்கள் மற்றும் மேலும் 14 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மொனராகலை – சியம்பலாண்டுவ பிரதான வீதியில் கொடையான பிரதேசத்தில் இபோச பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் சியம்பலாண்டுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் மொனராகலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சியம்பலாண்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles