ரமழான் பண்டிகையை முன்னிட்டு பேரிச்சம் பழங்களுக்கு விதிக்கப்பட்ட விசேட பண்டங்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது.
இந்த வரி எதிர்வரும் இரண்டு நாட்களில் குறைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படிஈஇறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பேரிச்சம் பழத்திற்கு தற்போது அறவிடப்படும் 200 ரூபா விசேட பண்ட வரியானது ஒரு ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.