புதிய பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் இன்று (29) காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
36வது பொலிஸ் மா அதிபராக பதவியேற்ற பின்னர் தேஷபந்து தென்னகோன் ஜனாதிபதியை சந்தித்தார்.
புதிய பொலிஸ் மா அதிபருக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி, அவருடன் சிநேகபூர்வமாக உரையாடினார்.
புதிய பொலிஸ் மா அதிபர் ஜனாதிபதிக்கு பாரம்பரிய பரிசில் ஒன்றை வழங்கினார்.