அதிக பெறுமதியான அரியவகை வலம்புரி சங்குடன் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
முல்லைத்தீவு விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று (28) சீனக்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருகோணமலை கண்டி வீதியின் கப்பல்துறை பகுதியில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, முச்சக்கரவண்டியில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட 945 கிராம் நிறை கொண்ட வலம்புரி கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் புளியங்குளம் மற்றும் கந்தளாய் ஆகிய பகுதிகளை சேர்ந்த 45, 49 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் சீனக்குடா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.