மஹாபாகே பகுதியில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் துப்பாக்கித்தாரியுடன் சென்ற சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரை சூரியவெவ பிரதேசத்தில் வைத்து கைது செய்ய சென்ற போது விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கைக்கு சமாந்தரமாக இன்று (28) விசேட அதிரடிப்படையினர் சூரியவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடிகம ஏரிக்கு அருகில் உள்ள வைத்து அவரை கைது செய்யச் சென்ற போது துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
இதன்போது சந்தேகநபர் உடனடியாக அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், அதிகாரிகளின் தனிப்பட்ட பாதுகாப்பு கருதி உடனடியாக பதில் துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளதுடன், அதில் காயமடைந்த நபர் சூரியவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.