Thursday, April 3, 2025
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகனடா ஆசை காட்டி பணம் பறித்த பெண் கைது

கனடா ஆசை காட்டி பணம் பறித்த பெண் கைது

கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பல்வேறு நபர்களிடம் பல இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த பெண் 50 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளதாகவும் அவர் இரட்டைக் குடியுரிமை பெற்ற பெண் எனவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பாணந்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரின் மோசடியில் சிக்கிய வத்தளை, பாணந்துறை, கொழும்பு, மாத்தறை பிரதேச மக்கள் பாணந்துறை பிரிவின் விஷேட குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு செய்த முறைப்பாடுகளை அடுத்து பொலிஸார் இந்த பெண்ணைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண் கனடாவில் கணக்காளராக பணியாற்றுவது தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles