மஹரகம பிரதேசத்தில் கட்டடமொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹைலெவல் வீதிக்கு அருகில் உள்ள கட்டடமொன்றை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தொழிலாளர்கள் மீது கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுவர் விழுந்ததில் காயமடைந்த ஊழியர்கள் இருவரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 45 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளதாகவும், அவரது சடலம் தற்போது களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த மற்றைய நபர் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.