புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆற்றங்கரை வீதியில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புத்தள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரஹெர மாவத்தை பகுதியில் உள்ள ஆற்றின் கரையில் நேற்று (27) குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
உயிரிழந்தவர் 70 முதல் 75 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும், 05 அடி 11 அங்குல உயரம், குட்டை முடி, வழுக்கைத் தலை, மெலிந்த உடல் கொண்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
சடலம் வெல்லவாய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், புத்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.