Friday, July 18, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயுவதி செலுத்திய மோட்டார் சைக்கிள் மோதி வயோதிப பெண் படுகாயம்

யுவதி செலுத்திய மோட்டார் சைக்கிள் மோதி வயோதிப பெண் படுகாயம்

பசறை நகரில் பாதசாரிகள் கடவையில் வீதியை கடக்க முற்பட்ட வயோதிப பெண் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்துள்ளார்.

காயமடைந்த அவர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த வயோதிப பெண் பசறை ஆக்கரத்தன்னை பகுதியை சேர்ந்த 82 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

லுணுகல பிரதேசத்தில் இருந்து பதுளை நோக்கி பயணித்த 22 வயதுடைய யுவதியொருவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்று பாதசாரி கடவையை கடந்து சென்ற வயோதிப பெண் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளை செலுத்திய பெண்ணும் பசறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்

மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles