எரிபொருள் விலை சூத்திரத்திற்கு எதிர்காலத்தில் நிவாரணம் வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி, விலைச்சூத்திரத்தின் மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்கும் 4% ஈவுத்தொகை குறைக்கப்பட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அமைச்சர் தெரிவித்தார்.