Saturday, July 19, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇரு சகோதரர்களை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபர் கைது

இரு சகோதரர்களை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபர் கைது

சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் சகோதரியும், சகோதரன் ஒருவரும் கத்திகுத்துக்கு இலக்கான நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்களுக்கு இடையில் தர்க்கம் ஏற்பட்டு, அது கைக்கலப்பாக மாறியுள்ளது.

அதன் போது, இரு சகோதரர்களின் சண்டையை விலக்கி சமாதானப்படுத்த சகோதரி முயற்சித்துள்ளார்.

அவ்வேளை சகோதரன் ஒருவர் தனது சகோதரி மற்றும் சகோதரன் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தியுள்ளார்.

அதில் காயமடைந்த இருவரையும் அயலவர்கள் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இந்நிலையில் கத்தி குத்து தாக்குதல் நடத்திய சகோதரன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles