அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் இரத்மலானை களஞ்சியசாலை மற்றும் கொழும்பு பிரதான அலுவலக ஊழியர்கள் இன்று (27) காலை 8 மணி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.
சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.