Monday, May 26, 2025
27.8 C
Colombo
செய்திகள்உலகம்ராமேஸ்வரம் மீனவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

ராமேஸ்வரம் மீனவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

ராமேஸ்வரம் மீனவர்களால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவந்த உண்ணாவிரதம் மற்றும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

அவர்கள் இன்றைய தினம் மீண்டும் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் கைதாகியுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 17 ஆம் திகதி முதல் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பையும், நேற்று முன்தினம் முதல் தொடர் உண்ணாவிரதத்தையும் முன்னெடுத்திருந்தனர்.

இந்தநிலையில், தமிழக சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களுடன் நேற்று மாலை முன்னெடுத்த பேச்சுவார்த்தையையடுத்து, உண்ணாவிரதம் மற்றும் பணிப்புறக்கணிப்பு என்பன கைவிடப்பட்டுள்ளன.

இதனையடுத்து, ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக கடலுக்கு சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles