Friday, July 18, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுச்சக்கர வண்டி விபத்தில் பெண் பலி

முச்சக்கர வண்டி விபத்தில் பெண் பலி

ரிக்கில்லகஸ்கட – திம்புல்கும்புர வீதியில் நேற்று (25) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உடகலையிலிருந்து ரிக்கில்லகஸ்கட நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி, அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் ரிக்கிலகஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரதியும், 6 வயது குழந்தையும் மேலதிக சிகிச்சைக்காக கண்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles