உறுமய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மக்கள் தமது காணியில் சுதந்திர உரிமை கோரி விண்ணப்பிப்பதற்கான அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி தினமும் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை உறுமய தேசிய செயற்பாட்டு அலுவலகத்தில் 1908 என்ற அவசர தொலைபேசி இலக்கம் மற்றும் 011 435 4600, 011 435 4601 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பதிவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.