கடந்த சில நாட்களாக மூடப்பட்டிருந்த பரிஸ் நகரில் உள்ள ஈபிள் கோபுரம் சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
06 நாட்களுக்குப் பின்னர் ஈபிள் கோபுரம் திறக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈபிள் கோபுர ஊழியர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தால் அது 6 நாட்களாக தற்காலிகமாக மூடப்பட்டது.