முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நேற்று (25) மாலை சட்டவிரோதமாக உடும்புகளை இறைச்சிக்காக பிடித்த மூவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு கைவேலி முதலாம் வட்டார பகுதியில் காட்டில் உடும்புகளை வேட்டையாடி வருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதற்கமைய, மேற்கொள்ளப்ப்டட சுற்றிவளைப்பில் குறித்த காட்டுப்பகுதியில் உடும்புகளை பிடித்து இறைச்சிக்காக விற்பனை செய்ய முற்பட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.
27, 27, 55 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து நான்கு உடும்புகள் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்களையும் சான்று பொருட்களையும் புதுக்குடியிருப்பு பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.