Friday, March 14, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமஹாபாகே துப்பாக்கிச்சூடு: இராணுவ சிப்பாய் ஒருவர் கைது

மஹாபாகே துப்பாக்கிச்சூடு: இராணுவ சிப்பாய் ஒருவர் கைது

மஹாபாகே பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் இன்று (24) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தும் போது, இரண்டு முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் தற்போது பணியாற்றும் இராணுவ வீரர் ஒருவரும் உடன் இருந்திருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் தற்போது செங்கலடி முகாமில் உள்ள 4வது கெமுனு ஹேவா படைப்பிரிவில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு – செங்கலடி முகாமில் வைத்து அவரை கைது செய்ய பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சென்ற போது செய்யச் செல்லும்போது சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இன்று (24) பிற்பகல் அம்பாறை பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹாபாகே – எல்பிட்டிவல சந்திக்கு அருகில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இறைச்சிக் கடை உரிமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாகக் கருதப்படும் ‘வெல்லே சாரங்கா’வின் உறவினரான ‘உக்குவா’ என்ற நபரே இவ்வாறு உயிரிழந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles