ஜெர்மனியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கணிசமான அளவு கஞ்சாவை வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதிய சட்டத்திற்கு ஜேர்மன் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி கஞ்சாவை பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்கும் வகையில் சட்டம் அமுலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சட்டத்தின்படி, பொது இடங்களில் 25 கிராம் வரை கஞ்சாவும், தனிநபர் வீடுகளில் சட்டப்பூர்வமாக 50 கிராம் கஞ்சாவும் வைத்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.